ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள்: யோசனைகளை வணிகமாக மாற்றுதல் -
ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள் : யோசனைகளை வணிகமாக மாற்றுதல் - தூய மரியன்னை கல்லூரியின் (தன்னாட்சி) நிறுவனத்தின் நிறுவன புத்தாக்க மன்றம்(IIC) மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு (EDC) ஆகியவை யங் இந்தியன்ஸ் அமைப்புடன் இணைந்து " ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள் : யோசனைகளை வணிகமாக மாற்றுதல் " என்ற தலைப்பில் துவக்க விழா மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சியை 03.08.2026 அன்று ஸ்டார் ஹாலில் சிறப்பாக நடந்தது. முனைவர் எஸ். காயத்ரி தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் . வருண் அரவிந்த் , படைப்பாக்க இயக்குநர் மற்றும் இணை நிறுவனர், ஸ்டுடியோ சினிஸ்டா சிறப்பு வளமுனைவராக கலந்து கொண்டார். அவர்கள் தொழில்முனைவு சிந்தனை, புதுமையான யோசனைகளை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் வழிமுறைகள், தொடக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகள், தலைமைத்திறன் மற்றும் புதுமையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே தொழில்முனைவு...