தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது
சத்யா கோப்பைக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து ஆண் பெண் விண்ணொளி போட்டி தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத்தினரால் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் ஆண்கள் பிரிவில் ஆறு அணியினரும் பெண்கள் பிரிவில் நான்கு அணியினரும் இந்த 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டியில் இந்தியாவில் தலைசிறந்த சர்வதேச புகழ்பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் தினமும் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும் இதற்கான அனுமதி இலவசம் நம் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி நமது மாவட்டத்தில் கைப்பந்து விளையாட்டினை மேலும் சிறப்பாக வளர்த்திடும் உயரிய நோக்கத்தில் இந்த அகில இந்திய கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன
சுமார் 5000 பேர் அமர்ந்து தினமும் விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கத்தக்க விதமாக சிறப்பான கலரி சார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தனித்தனியாக விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்காக தங்குமிடங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அரை இறுதிப் போட்டியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது
இப்போோட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சத்யா கோப்பை வழங்கப்பட உள்ளது இந்நிகழ்வின் முதல் நாள் துவக்க விழாவில் தூத்துக்குடி வ உ சி துறைமுக துணை தலைவர் திரு ராஜேஷ் சௌந்தரராஜன் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமை தாங்கி சத்யா ஏஜென்சி லிமிடெட் திரு ஜேக்சன் சாமுவேல் அவர்கள் மற்றும் தமிழக கைப்பந்து கழக வாழ்நாள் தலைவர் திரு அர்ஜுன்துரை அவர்கள் முன்னிலையில் போட்டிகளை துவக்கி வைக்கிறார்கள் மேலும் 14 6 2026 இறுதி நாள் விழாவில் தூத்துக்குடி வ உ சி துறைமுக தலைவர் திரு சுசந்தா குமார் புரோகித் iRSEE அவர்கள் தலைமையில் சத்யா ஏஜென்சி லிமிடெட் திரு ஜான் ரோஷன் அவர்கள் மற்றும் தமிழக கைப்பந்து கழக பொதுச் செயலாளர் திரு மார்ட்டின் சுதாகர் அவர்கள் முன்னிலையில் தமிழக மின் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு ஸ்ரீநாத் அவர்கள் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சத்யாக ஏஜென்சி லிமிடெட் நிறுவனமும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன் செயலாளர் ரமேஷ் குமார் பொருளாளர் செயின்ட் ரவி ராஜன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செய்து வருகிறார்கள்


Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு