ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள்: யோசனைகளை வணிகமாக மாற்றுதல் -

ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள்: யோசனைகளை வணிகமாக மாற்றுதல் -
தூய மரியன்னை கல்லூரியின் (தன்னாட்சி) நிறுவனத்தின் நிறுவன புத்தாக்க மன்றம்(IIC) மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு (EDC) ஆகியவை யங் இந்தியன்ஸ்  அமைப்புடன் இணைந்து "ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள்: யோசனைகளை வணிகமாக மாற்றுதல்" என்ற தலைப்பில் துவக்க விழா மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சியை 03.08.2026 அன்று ஸ்டார் ஹாலில் சிறப்பாக நடந்தது. முனைவர் எஸ். காயத்ரி  தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று   நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் . வருண் அரவிந்த், படைப்பாக்க இயக்குநர் மற்றும் இணை நிறுவனர், ஸ்டுடியோ சினிஸ்டா  சிறப்பு வளமுனைவராக கலந்து கொண்டார். அவர்கள் தொழில்முனைவு சிந்தனை, புதுமையான யோசனைகளை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் வழிமுறைகள், தொடக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகள், தலைமைத்திறன் மற்றும் புதுமையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே தொழில்முனைவு மனப்பான்மை, புதுமை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்தது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன்   கலந்து கொண்டு வளமுனைவர்களுடன் கலந்துரையாடி தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் மொத்தம் சுமார் 226  மாணவர்கள் பயனடைந்தனர். முனைவர் எ. டேஃபடில் டி அல்மெய்டா ssநன்றியுரை ஆற்றினார்; அதோடு நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Popular posts from this blog

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா* அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.