ஆரிவேலை குறித்த பயிற்சி முகாம்:தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் ஆரி வேலை குறித்த கைமுறை பயிற்சியானது கீழ அழகாபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டது

ஆரிவேலை குறித்த பயிற்சி முகாம்:
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் ஆரி வேலை குறித்த கைமுறை பயிற்சியானது கீழ அழகாபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி 16.03.2026 முதல் 20.03.2026 வரை காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
துவக்க நிகழ்வானது வரலற்றுத்துறை தலைவர் முனைவர் அ.மாலினி அப்சலா அவர்களால் வாழ்த்துரையுடன் துவக்கப்பட்டது. Morning Star NGO அமைப்பின் பிரதிநிதிகளான திருமதி இராசாத்தி மற்றும் முதன்மை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு ஆரி வேலைக்கான அடிப்படை முறைகள், தையல் வடிவங்கள் மற்றும் அலங்கார நுட்பங்கள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கினர்.

இந்நிகழ்வானது கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ், மற்றும் சமூக மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெஜி ஆகியோரின் வாழ்த்துக்களுடன், துறைத்தலைவர் முனைவர் அ மாலினி அப்ஸ்லா அவர்களின் தலைமையில் பேராசிரியைகள் முனைவர் தே. வினோபா கிளாடிஸ், மற்றும் முனைவர் சு.ச.அனுஜா ஆகியோரின் வழிகாட்டலின்படி சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியானது கீழ அழகாபுரியை சார்ந்த மகளிர்க்கு திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் பயனுள்ள முயற்சியாக அமைந்தது.

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு