மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

தூய மரியன்னை கல்லூரி – தன்னாட்சி, தூத்துக்குடி ஆங்கிலத் துறையின் முதுநிலை மற்றும் ஆய்வு துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சமூக மேம்பாட்டு திட்டம் இணைந்து “ஒரு மரம் நட்டு, எதிர்காலத்தை வளர்ப்போம்” என்ற தலைப்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை 04.03.2026 அன்று காலை 6.30 மணிக்கு தருவைக்குளத்தில் நடத்தினர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மரநடுகையை ஊக்குவிக்கவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல மரக்கன்றுகளை நட்டு பசுமையை வளர்த்தனர்.

இந்நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் டாக்டர் பி. செரீனா மார்கரெட் மற்றும் டாக்டர் எஸ். புலோமைன் ரெஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில், பொறுப்பாசிரியர்கள் டாக்டர் மு. ஹெமினா மற்றும் திருமதி மெல்பா ஷேரன் அவர்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. அனைவரின் உற்சாகமான பங்கேற்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு