தூத்துக்குடி மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் சமூக மேம்பாட்டு திட்டம் – டச் (TOUCH), உன்னத் பாரத் அபியான் மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை இணைந்து, 26.02.2026 அன்று பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரை தருவைகுளம் புனித மைக்கேல் ஆரம்பப் பள்ளியில் சிறுதானிய உணவுப் பொருட்கள் குறித்த செய்முறைப் பயிற்சியை நடத்தியது.

சிறுதானிய உணவுப் பொருட்கள் தொழில் முனைவோரான திருமதி மு. தன்வீர் ஷஹானா அவர்கள் வளநபராக கலந்து கொண்டு, சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பை விளக்கி, பல்வேறு சிறுதானிய உணவுகளை தயாரிக்கும் முறையை செய்முறையாகக் கற்றுக் கொடுத்தார். இப்பயிற்சி பெண்களுக்கு தொழில் முனைவு திறனையும் சுயதொழில் வாய்ப்புகளையும் ஊக்குவித்தது.
முனைவர் மரியா சகாய ஷர்மிளா அவர்கள் மேற்கொண்ட “சிறுதானிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குதல்” என்ற திட்டத்தின் வெற்றிகரமான தாக்கத்தின் கீழ் இப்பயிற்சி திட்டம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஆங்கிலத் துறைத் தலைவர் முனை