தூய மரியன்னை கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள்பழைய காயலில் தொழில்முனைவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

தூய மரியன்னை கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள்பழைய காயலில் தொழில்முனைவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (CDP) மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) அமைப்பின் இணைப்பில், 28.02.2026 அன்று பழைய காயல் ஊராட்சியில் இளம் பெண்களுக்கான தொழில்முனைவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இளம் பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான எளிய மற்றும் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய சிறு தொழில்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்தே மேற்கொள்ளக்கூடிய சேவை சார்ந்த தொழில்முனைவு வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனுடன், பெண்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் உடை தொடர்பான சேவைகளை தொழில்முனைவு முயற்சியாக மாற்றும் வழிமுறைகள் குறித்து செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் வளநர் ஆக விலங்கியல் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி விஷிகா செயல்பட்டு, இளம் பெண்களுக்கு பயனுள்ள தொழில்முனைவு திறன்களை எளிய முறையில் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ஜெஸி, செயலர் முனைவர் அருட் சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர் அருட் சகோதரி எழிலரசி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட் சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் UBA ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
விலங்கியல் துறை தலைவர் முனைவர் ஜோஸ்லின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பேராசிரியர்கள் முனைவர் ஷோபா மற்றும் முனைவர் நிரஞ்சனி மாணவிகளை வழிநடத்தினர்.
இந்நிகழ்ச்சி மூலம் பழைய காயல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு சிறு தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தன்னம்பிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்தது.

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு