தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து " கதை சொல்லும் நிகழ்வு " இன்று 06.02.26 வெள்ளிக்கிழமை தாளமுத்துநகர் R. C. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து " கதை சொல்லும் நிகழ்வு " இன்று 06.02.26 வெள்ளிக்கிழமை தாளமுத்துநகர் R. C. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி. வின்சென்ட் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தருவைக்குளம் கிளை செயலாளர் தோழர். லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நிகழ்வின் சிறப்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர். புளோரா மாணவர் மாணவியர்களுக்கு நற்பண்புகள் வளர்க்கும் கதைகள் சொல்லி ஊக்குவித்தார். மாணவர்கள் மகிழ்வுடன் கேட்டு ரசித்தனர். நிறைவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருன்றம் தூத்துக்குடி மாநகர கிளை செயலாளர் தோழர். ஆ. மாரிமுத்து நன்றியுரையாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் அமைப்பாளர் தோழர்.அ. ரவி நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் திருவிழா நாட்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது