கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.
கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு.
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் குடியரசு தினத்தன்று கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நுண்ணுயிரியல் துறை (சுயநிதிப் பாடப்பிரிவு) இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு ஊராட்சி மக்களின் நலனுக்காக மக்களின் குறைகளை எடுத்துக் கூறினர், மற்றும் மக்களின் தேவைகளை குறித்தும் எடுத்துக் கூறினர். சமூக மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எம் மாணவிகள் எடுத்துரைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சண்முக ஐயா ,செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர் மற்றும் பல முக்கியமான உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதி