கோரம்பள்ளம் கிராம சபைக் கூட்டத்தில் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
கோரம்பள்ளம் கிராம சபைக் கூட்டத்தில் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு தூத்துக்குடியில் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தூய மரியன்னை கல்லூரியின் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கோரம்பள்ளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பு, கிராம மக்களின் தேவைகளை எடுத்துரைத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள்
மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) கணிதத் துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கோரம்பள்ளத்தில் (26.01.2026) அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் கிராம வளர்ச்சிக்காக தங்களால் இயன்ற உதவிகளையும் கிராம மக்களின் தேவைகளையும் தெரிந்து கொண்டனர். இக்கூட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்து செயலாளர் திரு. சத்யராஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ திரு.சண்முகய்யா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அரசு பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கோரம்பள்ளம் ஊர் மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். சுற்றுச்சூழல் தூய்மை, குடிநீர் வினியோகம் மற்றும் சுத்திகரிப்பு ஆகிய தேவைகளைக் குறித்து கலந்துரையாடினார்கள். இக் கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் மாணவிகள் கிராம மக்களுக்கு நிலையான கிராமங்களுக்கு கழிவு மேலாண்மை, பாதுகாப்பான வீடுகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் ஆர்வமுடன் கலந்து உரையாடினர்.
இம்முயற்சிகள் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி கணித துறை இரண்டாம் ஆண்டு மாணவிகளால் உன்னத் பாரத் அபியான் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ, செயலாளர் மற்றும் கணிதத்துறை தலைவர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது