கோவங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு.
கோவங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு.
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் குடியரசு தினத்தில் இன்று கோவங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வணிகவியல் துறை (சுயநிதிப் பாடப்பிரிவு) இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கோவங்காடு ஊராட்சி செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஆல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். வணிகவியல் துறை (சுயநிதி பிரிவு) ஒருங்கிணைப்பாளர் கீதா மகேஸ்வரி, பேராசிரியர் ஜெ.அஜித்தா மாணவிகளை வழிநடத்தினர்.